உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளாஸ்டிக் பயன்பாடு தாம்பரத்தில் அதிகரிப்பு

பிளாஸ்டிக் பயன்பாடு தாம்பரத்தில் அதிகரிப்பு

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது, பெயருக்காக ஒரு சோதனை நடத்தி, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கம்.பல மாதங்களாக இதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். அதனால், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்துார், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் விற்பனை மீண்டும் அதிகரித்துவிட்டது.எனவே, மாநகாரட்சி சுகாதாரத் துறையினர், ஐந்து மண்டலங்களிலும் முறையாக சோதனை நடத்தி, பிளாஸ்டிக் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ