உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்ஸ்.,கள் 8 பேர் பணியிட மாற்றம்

இன்ஸ்.,கள் 8 பேர் பணியிட மாற்றம்

தாம்பரம்,தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் பணியாற்றி வந்த 8 இன்ஸ்பெக்டர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.தாம்பரம் காவல் ஆணையரகம், ஐ.எஸ்., இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நடராஜன் பள்ளிக்கரணைக்கும், கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தாம்பரத்திற்கும், கூடுவாஞ்சேரி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் குரோம்பேட்டைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.இதேபோல், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அணில் குமார் ஐ.எஸ்., பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ராக்குமதி சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஐ.எஸ்., பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். பள்ளிக்கரணை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கேளம்பாக்கத்திற்கும், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் பள்ளிக்கரணை குற்றப் பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ