உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வான் நோக்கி நிழற்குடை தகரம் ஓராண்டாக தொடரும் அவலம்

வான் நோக்கி நிழற்குடை தகரம் ஓராண்டாக தொடரும் அவலம்

வில்லிவாக்கம்:வில்லிவாக்கம் எம்.டி.எம்., சாலையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் நாதமுனி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில், பிராட்வேயில் இருந்து ஆவடி, கொளத்துார், முகப்பேர், அம்பத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், தடம் எண்: 48சி, 48ஏ, 71, 120, 35 உள்ளிட்ட பேருந்துகள் நின்று செல்லும்.இங்கிருந்து பாடி, முகப்பேர், அம்பத்துார், திருவள்ளூர் வரை மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையின் தகரம் பெயர்ந்து, வானை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் மழை, வெயில் காலங்களில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடையில் உட்காருவதற்கு அச்சப்படுகின்றனர்.'பல லட்சம் ரூபாய் செலவில், நிழற்குடையில் விளம்பரம் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் நிழற்குடையை சீரமைத்து இருக்கலாம்' என, பயணியர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ