மேலும் செய்திகள்
காசிமேடு மீன்கள் விலை நிலவரம்
03-Mar-2025
காசிமேடு, தமிழகத்தில், மீன்பிடித்தடை காலம் ஏப்., 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். ஏப்., மாதத்திற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.குறிப்பாக வஞ்சிரம், பாறை, கொடுவா, கேரை உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, சங்கரா, கானாங்கத்த உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. அதேபோல, அரிய வகை மீனான சூரிய மீன் ஒன்று மீனவர் வலையில் பிடிபட்டது; இது 300 கிலோ அளவில் இருந்தது.வரத்து அதிகமாக இருந்தாலும், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் பெரிய மாற்றமில்லை.மீன் கிலோ (ரூ.)வஞ்சிரம் 900கருப்பு வவ்வால் 500 - 600வெள்ளை வவ்வால் 1,000 - 1,200நெத்திலி 300 - 350கடம்பா 300 - 350கானாங்கத்த 150 - 200கேரை 100 - 130சூரை 100 - 130பாறை 400 - 500கடல் விரால் 400 - 500இறால் 300 - 400டைகர் இறால் 1,000 - 1,200நண்டு 300 - 350
03-Mar-2025