வாலிபரை காரில் கடத்தி சென்று மொபைல் போன், செயின் பறிப்பு
மறைமலை நகர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 32. ஊரப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதி சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.நேற்று முன்தினம் இரவு, திண்டிவனம் செல்ல, ரயில் நிலையத்தில் இருந்து பரனுார் டோல்கேட் பகுதிக்கு நடந்து சென்றார். அங்கு நின்ற மூவர், ரமேஷை காரின் உள்ளே வலுக்கட்டாயமாக ஏற்றினர்.அவரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த 'சாம்சங்' மொபைல் போன் மற்றும் 1.5 சவரன் தங்க செயினை பறித்து, தைலாவரம் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.நண்பர்கள் உதவியுடன் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த ரமேஷ், செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.