உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டாய திருமணம் செய்ய நர்ஸ் கடத்தல்: நான்கு பேர் கைது

கட்டாய திருமணம் செய்ய நர்ஸ் கடத்தல்: நான்கு பேர் கைது

வேளச்சேரி, தேவகோட்டை, ராம்நகரை சேர்ந்தவர் ஜமுனா, 23. வேளச்சேரியில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிகிறார்.நேற்று காலை 9:00 மணிக்கு, விடுதியில் இருந்து நடந்து சென்றார். வழியில் மாருதி இகோ காரில் காத்திருந்த நான்கு பேர் சேர்ந்து, ஜமுனாவை வழிமறித்து கடத்தி சென்றனர். உடன் பணி புரியும் நர்ஸ் மற்றும் சாலையில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் படி, வேளச்சேரி போலீசார் விசாரித்தனர். கார் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில், ஜமுனாவை கடத்திச் சென்றது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த துாரத்து உறவினரான சபாபதி, 27 என தெரிந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ராமநாதபுரம் நோக்கி கடத்தி செல்வதும் தெரிந்தது. காலை, 11:00 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடியில், காரை போலீசார் மடக்கினர். ஜமுனாவை மீட்டு, நான்கு பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரித்தனர்.சபாபதி மற்றும் அவரது நண்பர்கள் ஹரீஷ், 20, அஜய், 25, ராஜேஷ், 30 என தெரிந்தது. ஜமுனாவை ஒரு தலையாக காதலித்த சபாபதி, திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். இதற்கு, யமுனாவின் பெற்றோர் மறுத்து, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த சபாபதி, கட்டாயத்திருமணம் செய்ய ஜமுனாவை கடத்தியது, விசாரணையில் தெரிந்தது.அச்சரப்பாக்கம் சென்று ஜமுனாவை அழைத்து வந்த வேளச்சேரி போலீசார், அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பெண்ணின் தந்தை சந்திரமவுலி அளித்த புகாரின்படி, ஆள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி