குன்றத்துார் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை
குன்றத்துார், குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அறங்காவலர் குழு முயற்சியால், 496 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது.இந்தாண்டு பிரம்மோற்சவ விழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதற்கான வசதிகளை ஏற்படுத்த, அனைத்து துறையினருக்கான ஆலோசனை கூட்டம், நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது.அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். இதில், ஹிந்து அறநிலையம், வருவாய், நகராட்சி, தீயணைப்பு, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், சிறப்பு பேருந்து இயக்குதல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், வாகன நிறுத்தும் இடம், அன்னதானக் கூடம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயகுமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.