உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனங்களில் பேட்டரி திருடியவர் கைது

வாகனங்களில் பேட்டரி திருடியவர் கைது

கண்ணகி நகர், கண்ணகி நகர், எழில் நகரில் நிறுத்திய ஆட்டோ, சிறிய ரக லோடு வாகனங்களில், நேற்று முன்தினம் இரவு பேட்டரிகள் திருடுபோனது. ஒவ்வொரு பேட்டரியும், 5,000 - 6,000 ரூபாய் மதிப்பு கொண்டது. இதுகுறித்து, வாகன உரிமையாளர்கள் கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுனில், 19, என்பவர் திருடியது தெரிந்தது. பேட்டரிகளை திருடி, 500 ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளார். நேற்று, சுனிலை கைது செய்த போலீசார், அவர் திருடிய ஐந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ