மேலும் செய்திகள்
வடமதுரையில் நேற்று மீண்டும் வெடிச்சத்தம்
28-Aug-2024
சேலையூர், கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், ஆறுமுகனார் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு, பயங்கர வெடி சத்தம் கேட்டது.அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்த போது, யாரும் வசிக்காத இடத்தில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெடி சத்தம் கேட்ட இடத்தில், குட்டி குட்டியாக துணிகள் சிதறி கிடந்தன.துணியால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என, சேலையூர் போலீசார் சந்தேகித்து, அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
28-Aug-2024