உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் போன் திருடர்கள் சிக்கினர்

மொபைல் போன் திருடர்கள் சிக்கினர்

பெரம்பூர், பெரம்பூர், சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் உஷா, 38. இவர், தன் மகனிடம் கடைக்கு சென்று ‛பிரட்' வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். பணத்திற்கு பதில் மொபைல் போன் செயலி வழியாக பணம் செலுத்துமாறு கூறி, மொபைல் போனையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.சிறுவன் நெல்வயல் சாலை, ராமகிருஷ்ணா சாலை வழியே கடைக்கு செல்லும் போது, பைக்கில் வந்த இருவர் சிறுவன் கையில் வைத்திருந்த மொபைல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், ஓட்டேரியைச் சேர்ந்த ‛பிள்ளையார்' கணேஷ், 18, மற்றும் அர்ஜுன், 23, ஆகியோரை கைது செய்தனர்.இருவரும் மொபைல் போனை பறித்து, கொடுங்கையூரில் உள்ள சாகுல் ஹமீது, 31, என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி