உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிகரெட்டுடன் விமானத்தில் ரகளை பெரம்பலுார் நபருக்கு காப்பு

சிகரெட்டுடன் விமானத்தில் ரகளை பெரம்பலுார் நபருக்கு காப்பு

சென்னை, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் 165 பயணியர் இருந்தனர்.அப்போது, பயணி ஒருவர் இருக்கையில் அமர்ந்தபடி 'சிகரெட்' புகைத்தப்படி வந்துள்ளார். சக பயணியர் அவரை எச்சரித்து கண்டித்துள்ளனர். ஆத்திரமடைந்த அந்த நபர், மீண்டும் புகைபிடித்தபடி அவர்களிடம் வாக்குவாதம் செய்து, விமானத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த பணிப்பெண்கள், விமானத்தில் புகைபிடிப்பது தவறு என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கழிப்பறைக்கு சென்ற அவர், அங்கு புகை பிடித்துள்ளார்.இதையடுத்து தலைமை விமானிக்கு, விமான பணிபெண்கள் தகவல் கொடுத்தனர். சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.விமானம், சென்னையில் தரையிறங்கியதும், புகைபிடித்த பயணியை 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், 42, என்பது தெரியவந்தது. விமானத்தில், தடையை மீறி புகை பிடித்தது, விமான பாதுகாப்பு விதிமுறையை மீறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை