நேபாள சிறுவனுடன் மாயமான மாணவி மீட்பு
நீலாங்கரை, அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தன் பாட்டியுடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பாட்டி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில் அந்த மாணவி, பள்ளி முடிந்த பின் வாசலில், வடமாநில சிறுவன் ஒருவருடன், ஒரு மணிநேரத்திற்கு மேல் பேசுவது, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.மாணவியுடன் பேசிய சிறுவனின் மொபைல் போன்,'டவர்' வாயிலாக ஆய்வு செய்ததில், அவன் திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில் சிறுமியுடன் தங்கியிருப்பது தெரிந்தது.அவர்களை பிடித்த போலீசார், சிறுவன், இவருக்கு உதவிய சிவபிரசாத்,32, ஆகியோரை போக்சோவில் கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.