உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை வந்தடைந்தது கடற்படை கார் பேரணி

சென்னை வந்தடைந்தது கடற்படை கார் பேரணி

சென்னை, கடற்படைக்கு இளைஞர்களை ஈர்ப்பது, கடல் சார் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'நாட்டிக்கல் ட்ரைல்' என்ற கடற்படையின் கார் பேரணி, இம்மாதம் 3ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இரண்டு பிரிவாக துவங்கியது.இதில், 15 கார்களில், 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், மீனவர் அமைப்புகளிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த கார் பேரணி குழு, நேற்று சென்னை வந்தடைந்தது. சென்னை ஐ.என்.எஸ்., அடையார் கடற்படை நிலையத்திற்கு வந்த குழுவினரை, அங்குள்ள கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். தமிழகத்தின் மற்ற இடங்களுக்கு செல்வதற்காக, இன்று காலை 8:00 மணிக்கு பேரணி சென்னையில் இருந்து துவங்குகிறது. கார் பேரணியை, ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை