புதிதாக சமூக நலக்கூட பணி ஒட்டியம்பாக்கத்தில் துவக்கம்
ஒட்டியம்பாக்கம், பரங்கிமலை ஒன்றியம் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடம், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.அதனால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் தொகுதி மேம்பாட்டு நிதி 96 லட்சம் ரூபாயில், இரண்டு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.தவிர, ஒட்டியம்பாக்கம், ஒட்டியம்பாக்கம் காலனி, அரசன்கழனி என, மூன்று இடங்களில், காரியமேடை, தலா 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.இப்பணிகள், ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.