மேலும் செய்திகள்
இதய மருத்துவ சங்க தலைவர்
14-Sep-2024
சென்னை, சீரற்ற இதய துடிப்பு பாதிப்புகளுக்கு, கதிர்வீச்சு அச்சுறுத்தல் இல்லாத நவீன சிகிச்சை நுட்பத்தை, காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க நாட்டின், நியூயார்க்கை சேர்ந்த இதய மின்னியங்கியல் துறை நிபுணர் ஆடம் புட்சிகோவ்ஸ்கி மற்றும் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்த் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:இதயத்தின் மேல்புற அறைகளில், அதிவேகமாக துடிப்பு இருப்பது, 'ஏட்ரியல் பிப்ரிலேஷன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு இருந்தால், உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைப்படும். இதனால், இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும். இந்த பாதிப்பு, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, 'ப்லோரோஸ்கோப்பி' என்ற கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், சில எதிர்விளைவுகள் உள்ளன. அதற்கு மாற்றாக, 'ஏட்ரியல் அப்பன்டேஜ்' அடைப்பு சிகிச்சை, மின்னியங்கியல் பகுப்பாய்வு, இதய துடிப்பு சீரமைப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.சீரற்ற இதய துடிப்பு உள்ள நோயாளிகளுக்கு, இடது புறத்தில் உள்ள திசுப் பையை மட்டும் அகற்றவோ அல்லது அதனை அடைக்கவோ டாக்டர்கள் பரிந்துரைப்பர். இவர்களுக்கு, நவீன நுட்பங்கள் கொண்டு எதிர்விளைவுகள் இல்லாத சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Sep-2024