உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் இடத்தில் கட்டுமானம் மாநகராட்சிக்கு நோட்டீஸ்

கோவில் இடத்தில் கட்டுமானம் மாநகராட்சிக்கு நோட்டீஸ்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு அளித்த அம்மா உணவகத்தின் மேல், அனுமதியின்றி இரண்டு தளம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு, அறநிலையத்துறை சார்பில்,'நோட்டீஸ்' அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை, வடபழனியில் ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமாக, பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன.அந்த வகையில் வடபழனியில், நெற்குன்றம் பாதை எனப்படும் இணைப்பு சாலையில், ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இது, பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இங்கு அம்மா உணவகம் இயங்க அனுமதி கோரப்பட்டு, கோவில் நிர்வாகம் அனுமதியளித்தது. இதையடுத்து, கோவிலுக்கு வாடகை செலுத்தி, அம்மா உணவகம் இயக்கப்படுகிறது.இந்நிலையில், அம்மா உணவகத்தின் மேல் தளத்தில், இரண்டு அடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம், எந்த அனுமதியும் பெறவில்லை; தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த கட்டடம், மாநகராட்சி அலுவலகத்திற்காக கட்டப்படுவதாக கூறப்படுகிறது.இத்தகவல் அறிந்த கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை சார்பில், அனுமதியின்றி கோவில் சொத்தில் கட்டடம் கட்டுவது தொடர்பாக,'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டுமான பணி நிறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி