உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பறிமுதல் வாகனங்களின் உதிரிபாகங்கள் ஆட்டை

பறிமுதல் வாகனங்களின் உதிரிபாகங்கள் ஆட்டை

அமைந்தகரை:மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உடைத்து, உதிரி பாகங்களை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னையில், சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் 6, 8, 9 மற்றும் 10வது மண்டலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட வாகனங்கள், ஷெனாய் நகர் முதல் பிரதான சாலையிலுள்ள அரசின் காலி இடத்தில் வைக்கப்பட்டன.இவற்றை, அண்ணா நகர் மண்டல மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.அதன்படி நேற்று முன்தினம், உதவி பொறியாளர்கள் ஆய்வு செய்த போது, நான்கு கார்களின் முன்பக்கம் உடைக்கப்பட்டிருந்தது.அதிலிருந்து 'பேட்டரி, ஆடியோ பிளேயர், ஏசி மோட்டர், டயர்' உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடப்பட்டது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை, அமைந்தகரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை