பார்ட்டிக்கு சென்ற மாணவி கர்ப்பம்: மர்ம நபர்களுக்கு வலை
அண்ணா நகர், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் நேற்று, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்:கடந்த சில மாதங்களுக்கு முன், என் ஆண் நண்பர் ஒருவர், அரும்பாக்கம் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு, 'பார்ட்டி'க்கு அழைத்துச் சென்றார்.அங்கு மேலும், அடையாளம் தெரியாத சில ஆண் நபர்களும் இருந்தனர். பார்ட்டி முடிந்து மறுநாள் வீடு திரும்பினேன். சமீபத்தில், நான் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறி இருந்தது. மருத்துவமனையில் சோதித்த போது, கர்ப்பமானது உறுதியானது. பார்ட்டியில் எனக்கு கொடுத்த பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்களா என சந்தேகமாக உள்ளது. என் ஆண் நண்பரிடம் கேட்ட போது, முறையாக பதில் அளிக்கவில்லை. இதில் தொடர்புள்ள நபர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.