உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரம் தொகுதியில் 2,124 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்

மாதவரம் தொகுதியில் 2,124 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்

மாதவரம், சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டு மனை பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வு செய்தது. அதன்படி, 28,848 பயனாளிகளுக்கு பட்டா வழங்க முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி, முதற்கட்டமாக, நேற்று 2,124 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி பங்கேற்று, பயனாளிகளுக்கு பட்டா வழங்கினர். உதயநிதி பேசியதாவது: தேர்தல் சமயத்தில் பட்டா வழங்க வாக்குறுதி அளித்திருந்தேன். இரண்டு மாதத்தில், இந்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். வீட்டு மனை பிரச்னைகளில் எத்தனை சிக்கல்கள் இருந்தாலும், அதனை சரிசெய்ய முதல்வர் அமைத்த குழு, 28,848 பேருக்கு பட்டா வழங்க பரிந்துரைத்தது. முதற்கட்டமாக தற்போது 2,124 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். வீட்டு மனை, வீடு சொந்தமானதால் இனி நிம்மதியாக துாங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ