அரசு மருத்துவமனையில் போன் திருடியவர் கைது
சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுணா, 49. கடந்த 19ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மாமனாரை பார்க்க வந்தார்.அப்போது, மர்மநபர் ஒருவர், அவரது கை பையில் வைத்திருந்த மொபைல் போனை திருடிச் சென்றார்.இதை அறிந்த சுகுணா, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலையைச் சேர்ந்த யாக்கூப் பாட்ஷா, 34, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.