வில்லிவாக்கம் சந்தையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு
வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், மாநகராட்சி சுகாதார துறையின் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வில்லிவாக்கம் சந்தையில் நேற்று காலை நடந்தது.நிகழ்வில், சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சுகாதார ஆய்வாளர் பாலகுரு விளக்கினார். அதற்கு மாறாக, மஞ்சப்பை பயன்பாடு குறித்து அறிவுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். தேங்காய் வியாபாரி கிட்டு வியாபாரிகள் அனைவருக்கும் மஞ்சபைகளை வழங்கினார்.