உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நாலாபுறமும் போலீஸ் பாதுகாப்பு

தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நாலாபுறமும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை, செப். 7-சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பீர்பாட்டில் வீசிய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு நாலாபுறத்திலும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பீர் பாட்டிலை வீசிச் சென்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, கண்ணகி நகரை சேர்ந்த கோவர்தன் என்பதும், அவர் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகியும் என, தெரியவந்தது. இந்தசம்பவத்தை தொடர்ந்து, அறிவாலயத்திற்குள் செல்லும் வழியும், வெளியேறும் வழியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.வெளியேறும் வழியில், வழக்கமாக போலீசார் நிற்பதில்லை. தற்போது அங்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறிவாலயத்தின் பின்புறத்தில் உள்ள கலைஞர் அரங்கத்திற்கும், போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை