உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் நிலைய சுற்றுச்சுவர் பறிமுதல் லாரி சரிந்து சேதம்

காவல் நிலைய சுற்றுச்சுவர் பறிமுதல் லாரி சரிந்து சேதம்

போரூர், போரூர் காவல் நிலைய சுற்றுச்சுவர் அருகே பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த மணல் லாரி சரிந்து விழுந்து, காவல் நிலைய சுற்றுச்சுவர் உடைந்தது. போரூர், ஆற்காடு சாலையில், அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி வந்த லாரியை, நேற்று முன்தினம் இரவு, கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மணல் லாரி ஓட்டுனர் தப்பிச் சென்றதால், மற்றொரு ஓட்டுனர் வாயிலாக ஓட்டிச் சென்று, போரூர் காவல் நிலைய சுற்றுச்சுவர் அருகே நிறுத்தினர்.சாலையோரம் சென்ற பக்கவாட்டு கால்வாய் மூடி மீது, லாரியின் ஒரு பக்க டயர் ஏற்றி நிறுத்தப்பட்டது. சிறுது நேரத்தில், பாரம் தாங்காமல் கால்வாய் மூடி உடைந்து, காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது லாரி சாய்ந்தது.இதில், சுற்றுச்சுவர் உடைந்து விழுந்து, அதன் மீது இருந்த காவல் நிலைய பெயர் பலகையும் விழுந்தது. இதையடுத்து, 'கிரேன்' உதவியுடன், சரிந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை