உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை வஸ்து கடத்திய காரை மடக்கிய போலீசார்

போதை வஸ்து கடத்திய காரை மடக்கிய போலீசார்

திருவொற்றியூர், திருவொற்றியூர் போலீசார், நேற்று அதிகாலை எண்ணுார் விரைவு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், நான்கு பேர் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்த போலீசார், திருவொற்றியூர் - மாட்டுமந்தை மேம்பாலம் அருகே மடக்கினர்.போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த மூன்று பேர் இறங்கி தப்பியோடி விட்டனர்; ஓட்டுனர் பிடிபட்டார். விசாரணையில் அவர், முன்னுக்கு பின் முரணான பதிலளித்தார்.சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அதில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. பின், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், பிடிபட்ட நபர் திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த யோகேஸ்வரன், 21, என்பது தெரிய வந்தது.அவரிடம், விசாரித்ததில், திருவொற்றியூர், மஸ்தான் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 24, பூம்புகார் நகரைச் சேர்ந்த பிராங்கிளின் கேப்ரியல், 22, என்பது தெரிய வந்தது. இருவரையும் நேற்று காலை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 9,000 ரூபாய் மதிப்பிலான 1.7 கிலோ கஞ்சா; 5,500 ரூபாய் மதிப்பிலான 120 நைட்ரோவிட் மாத்திரைகள், ஷிப்ட் டூர் கார் மற்றும் விவோ மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணைக்கு பின், மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவான, ஆறு பேரை தேடி வருகின்றனர்.துரிதமாக செயல்பட்டு, போதை மாத்திரை விற்றவர்களை விரட்டிப்பிடித்த, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமால், போலீஸ்காரர்கள் கஜேந்திரன், கலைசெல்வன் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை, உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ