உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது - போலி பாஸ்போர்ட் அக்கா, தம்பி கைது

பொது - போலி பாஸ்போர்ட் அக்கா, தம்பி கைது

சென்னை, மார்ச் 11-இலங்கையைச் சேர்ந்தோர் துஷாந்தினி, 32, அருண்குமார், 29. அக்கா, தங்கையான இவர்கள், திருச்சி சஞ்சீவி நகர் மற்றும் சமயபுரத்தில், தனித்தனியாக வசித்து வந்தனர்.இவர்கள், போலி பாஸ்போர்ட் வாயிலாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்றுள்ளனர்.இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து, அப்பிரிவு போலீசார், துஷாந்தினி, அருண்குமார் ஆகியோரிடம் விசாரித்தனர்.அப்போது, இலங்கை போஸ்போர்ட்டில் 2009ல் இந்தியா வந்த இவர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, நம் நாட்டு பிரஜைபோல, ரேஷன் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளனர்.அதன் வாயிலாக, பாஸ்போர்ட் பெற்று, இலங்கைக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !