உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதுச்சேரி குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரி குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்

புழல், புழல், விநாயகபுரம் மூர்த்தி நகரில் 'முருகன் சான்ட்விச் கார்னர்' கடை உள்ளது. இங்கு, வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, அண்ணா நகர் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் உதவி கமிஷனர் ரவிக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு போலீசார், கடை வாசலில் இருந்த அட்டைப் பெட்டியை சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது.போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரித்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இறக்கி வைத்து சென்றதாக கூறினார். போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த இருவரை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !