உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மலை மகளிர் அணி சாம்பியன் ஹாக்கி பைனலில் புதுகை ஏமாற்றம்

தி.மலை மகளிர் அணி சாம்பியன் ஹாக்கி பைனலில் புதுகை ஏமாற்றம்

சென்னை:'கேலோ இந்தியா' மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மகளிர் சப் - ஜூனியருக்கான மாநில ஹாக்கி 'லீக்' போட்டியை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடத்தின.போட்டியில், புதுக்கேட்டை, வேலுார், கோவை, சிவகங்கை, ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், துாத்துக்குடி ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. எட்டு அணிகளும், 'ஏ' மற்றும் 'பி' என, இரு குரூப்பாக பிரிந்து 'லீக்' முறையில் மோதி, திருவண்ணாமலை - புதுக்கோட்டை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், ஆட்டம் துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே, திருவண்ணாமலை வீராங்கனை அகஸ்தியா முதல் கோல் அடித்து ஆறுதல் கொடுத்தார். இதனால், முதல் பாதி ஆட்டத்தில், திருவண்ணாமலை 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்த பாதி ஆட்டத்தில், 46 நிமிடத்தில் கவுசிகா, 54வது நிமிடத்தில் ஸ்வாதி ஆகியோர், தலா ஒரு கோல் அடிக்க, 3 - 0 என்ற கணக்கில் திருண்ணாமலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், ஈரோடு அணி, 2 - 1 என்ற கணக்கில், வேலுாரை தோற்கடித்து கைப்பற்றியது. ஈரோடு வீராங்கனை ஆண்டனி ரோசி, தர்ஷிரி தலா ஒரு கோல்களும், வேலுார் அணியின் சந்தியா ஒரு கோலும் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ