உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில ஹாக்கி பைனலுக்கு ஐ.ஓ.பி., தகுதி

மாநில ஹாக்கி பைனலுக்கு ஐ.ஓ.பி., தகுதி

சென்னை, செப். 12– திருவள்ளூர் ஹாக்கி சங்கம் சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது. இதில், மகளிருக்கான இறுதிப்போட்டி தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்தன. முதல் தகுதிப்போட்டியில் எஸ்.எச்.இ., அணி, ஐ.ஓ.பி., அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐ.ஓ.பி., அணி, தெற்கு ரயில்வே அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியில், ஐ.ஓ.பி., அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்