உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராணி அஹில்யாபாய் ஆட்சி ஆன்மிக பண்பாட்டின் அடையாளம்

ராணி அஹில்யாபாய் ஆட்சி ஆன்மிக பண்பாட்டின் அடையாளம்

வியாசர்பாடி, வியாசர்பாடி - மகாகவி பாரதி நகர், விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில், ராணி அஹில்யாபாய் ஹோல்கர், 300வது ஜெயந்தி துவக்க விழா, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் - சென்னை மாநகர், சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில், நேற்று மாலை நடந்தது.விழா துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றி, அஹில்யாபாய் ஹோல்கர், திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. விழாவில், வித்யா பாரதி அமைப்பு செயலர் சுந்தர் ஜி பேசியதாவது:பலர் சமுதாயத்திற்கு பல விஷயங்களை கூறியுள்ளனர். அதில், அஹில்யாபாய் குறிப்பிடத்தக்கவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசியாக உயர்ந்தவர். அஹில்யாபாய் எதிர்ப்புகளை மீறி ஆட்சி புரிந்தவர்; அன்னிய ஆக்கிரமிப்புகளை முறியடித்தவர்; மகேஷ்வர் கோட்டை, நர்மதை நதிக்கரை, காசி விஸ்வநாதர் கோவில் உட்பட பல கோவில்கள் புனரமைத்தல் பணிகளை செய்தவர். வரிகுறைப்பு, பெண்களுக்கு ஊக்கம் என, பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். தேசிய ஆன்மிக பண்பாட்டின் அடையாளமாக, சாதாரண மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்தவர். இவருடைய ஆட்சி முறையை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை