உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சட்டவிரோதமாக கடத்தி வந்த அரிய பறவைகள் உயிரிழப்பு

சட்டவிரோதமாக கடத்தி வந்த அரிய பறவைகள் உயிரிழப்பு

சென்னை, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று, நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு வந்தது. இதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்று திரும்பியது தெரியவந்தது. அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், உடைமைகளை பிரித்து சோதனை செய்ததில் கூண்டுகள் இருந்தன. அதில், 'பிளாக் காலர்டு ஸ்டெர்லிங்' என்ற, வெளிநாட்டு அரிய வகையை சேர்ந்த ஆறு பறவைகள் இருந்தன.இதுகுறித்து, மத்திய வன உயிரன பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்தபோது, பறவைகள் மூச்சுத் திணறி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த பறவைகள் பாதுகப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கடத்தி வந்த பயணியிடம், அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை