சென்னை மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு
சென்னை, சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளின், 2025ம் ஆண்டிற்கான ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம், கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமையில் நேற்று நடந்தது.ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.அதில், சென்னை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 3,719 ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்ததில், தேவைக்கு ஏற்ப கூடுதலாக மூன்று ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளன. அதேபோல், 33 ஓட்டுச்சாவடிகளில் பிரிவு மாற்றம், நான்கு ஓட்டுச்சாவடிகள் இணைப்பு, 78 சாவடிகளில் கட்டட மாற்றம், மூன்று ஓட்டுச்சாவடி பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.இம்மாறுதலுக்கு பின், ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, 3,718 ஆக உயரும். 2025ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 29ல் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.