உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது கேட்பாரற்று கிடந்த 816 வாகனம் அகற்றம்

பொது கேட்பாரற்று கிடந்த 816 வாகனம் அகற்றம்

சென்னை,சாலையில் நீண்ட காலமாக கேட்பாரற்று, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 816 வாகனங்களை, மாநகராட்சி அகற்றி உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.அதன்படி, வடக்கு வட்டாரத்தில் 271 வாகனங்கள்; மத்திய வட்டாரத்தில் 649 வாகனங்கள், தெற்கு வட்டாரத்தில் 395 என, 1,315 வாகனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.இதில், 816 வாகனங்கள் அகற்றப்பட்டு உள்ளன.அகற்றப்பட்ட வாகனங்கள் மாநகராட்சியின் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. போலீசாரிடம் தடையின்மை சான்று பெற்று, வாகனங்கள் ஏலம் விடப்படும்.எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நாட்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை, உரிமையாளர்களே அகற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை