உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பங்குதாரரிடம் ரூ.6 கோடி மோசடி தில்லாலங்கடி தம்பதிக்கு காப்பு

பங்குதாரரிடம் ரூ.6 கோடி மோசடி தில்லாலங்கடி தம்பதிக்கு காப்பு

ஆவடி, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் சதீஸ், 58. இவர், அம்பத்துார், அத்திப்பட்டில் நாகராஜன் என்பவருடன் இணைந்து, 'வெஸ்டர்ன் லிப்' என்ற பெயரில் 2019ல் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.நம்பிக்கையின்படி, நிறுவனத்தின் முழு பொறுப்பையும் நாகராஜனிடம் சதீஸ் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு கொரோனா காலத்தில், நாகராஜன் அதே இடத்தில் அவரது மனைவி அமுதா பெயரில், 'ஏ.கே., - 2 அண்டு இன்ஜினியரிங்' என்ற பெயரில் நிறுவனம் துவங்கி, பெயர் பலகை மாற்றி, 'வெஸ்டர்ன் லிப்' நிறுவனத்தின் சொத்துக்களை தன் வசமாக்கி கொண்டார்.கையெழுத்து மற்றும் மொபைல் போன் எண்களை போலியாக பதிவு செய்து, இனி, 'வெஸ்டர்ன் லிப்' நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் 'ஏ.கே., - 2 அண்டு இன்ஜினியரிங்' நிறுவனம் மேற்கொள்ளும் என, வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இதன் வாயிலாக, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களுடன், 6 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார் என, கடந்த 6ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் சதீஸ் புகார் அளித்துள்ளார்.விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த வில்லிவாக்கம், அகத்தியர் தெருவைச் சேர்ந்த நாகராஜன், 55, மற்றும் அவரது மனைவி அமுதா, 49, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை