உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சி.பி.சி.எல்., ஆலையில் பாதுகாப்பு வார விழா

சி.பி.சி.எல்., ஆலையில் பாதுகாப்பு வார விழா

சென்னை, மணலியில் உள்ள சி.பி.சி.எல்., என்ற சென்னை பெட்ரொலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், 54வது தேசிய பாதுகாப்பு வார விழா நடந்தது. தலைமை பொது மேலாளர் ஸ்ரீராம் வரவேற்றார். செயல்பாடுகள் துறை இயக்குனர் கண்ணன், பாதுகாப்பு உறுதி மொழியையும், துணை பொது மேலாளர் ராஜேந்திர ஜே.பர்சுராம்கர, ஆண்டு பாதுகாப்பு அறிக்கையையும் வாசித்தனர்.தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஆனந்த் பேசியதாவது:தொழிற்சாலையில் நடக்கும் விபத்து குறித்து, விரிவான பகுப்பாய்வு நடத்த வேண்டும். மீண்டும் விபத்துக்கள் நடக்காதிருக்க, மூல காரணங்களை கண்டறிய வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிப்புகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் தான் பொறுப்பு. நுண்ணறிவு தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, பாதுகாப்பை நிர்வாகம் மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் கார்த்திகேயன் பேசுகையில், ''மருத்துவ பரிசோதனை பலன்களை, ஒப்பந்த ஊழியர்களுக்கு விரிவுபடுத்தியது பாராட்டுக்குரியது. பாதுகாப்பு மேலாண்மை குழுமத்தில் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும். தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு ஆபத்துக்கள் குறித்து, தொழிலாளர்கள் தாமாக முன்வந்து, நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.தொழில்நுட்பம் துறை இயக்குனரும், நிர்வாக இயக்குனருமான சங்கர் பேசுகையில், ''சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு சங்கத்தில் கூறப்பட்டுள்ள ஒன்பது உயிர்காக்கும் விதிகளை பின்பற்றுவதோடு, பாதுகாப்பு நெறிமுறைகளை கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பயன்படுத்தப்படுகிறது,'' என்றார்.பாதுகாப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிவர்கள் மற்றும் போட்டிகளில் வென்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !