சிங்கிள் காலம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை, செப். 7-சென்னை மாநகராட்சியில் பணியாற்றும், 275 பேர், பழைய மாநகராட்சி விதிகளின்படி, பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம், நகர்ப்புற உள்ளாட்சி விதி 2023ன்படி, அவர்களின் கல்வி தகுதியில் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய விதியில் இருந்து விலக்கு அளிக்கும்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.