உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபால் தேர்வு போட்டி 410 மாணவர்கள் பங்கேற்பு

வாலிபால் தேர்வு போட்டி 410 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை, செப். 7-சென்னை பள்ளிக்கல்வித் துறை, எஸ்.ஜி.எப்.ஐ., எனும் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், பல்வேறு விளையாட்டுகளுக்கான தேர்வு போட்டிகள், சென்னையில் நடத்தப்படுகிறது.அந்த வகையில், மண்டல அளவிலான வாலிபால் போட்டி, கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட மொத்தம் 410 பேர் பங்கேற்றுள்ளனர்.போட்டியில் தேர்வு செய்யப்படும் தலா ஏழு பேர் ஒரு அணியாக, மாநில போட்டியில் பங்கேற்பர்.தொடர்ந்து, மாநில போட்டியில் தேர்வாகுவோர், தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை