கல்லுாரி பேட்மின்டன் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
சென்னை,கல்லுாரிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடத்தை பிடித்தது.வேலுார், வி.ஐ.டி., கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லுாரி அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை, 2 - 0 என்ற செட் கணக்கில், வேலுார் வி.ஐ.டி., கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2 - 0 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்றது.அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், வள்ளியம்மை கல்லுாரி மற்றும் வேலுார் வி.ஐ.டி., கல்லுாரி அணி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தன.