உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை குதறிய தெரு நாய்

சிறுவனை குதறிய தெரு நாய்

நெற்குன்றம், பால்வாடி 2வது தெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து, 40. இவரது மனைவி செல்வி, 35. கூலி தொழிலாளர்கள். இவர்களது மகன் கேசவன், 10; ஐந்தாம் வகுப்பு மாணவர்.மூன்று நாட்களுக்கு முன், சிறுவன் கேசவன் குப்பையை போட, தெருவில் இருந்த குப்பை தொட்டி இருந்த பகுதிக்கு நடந்து சென்றார்.அங்கு வந்த தெரு நாய் ஒன்று சிறுவனின் கையில் இருந்த குப்பையை கவ்வி பறிக்க முயன்றது. மேலும், சிறுவனின் வலது கையை கடித்து குதறியுள்ளது. சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கையில் தையல் போட முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், தொடையில் இருந்து சதையை எடுத்து பொருத்த உள்ளனர். வேலைக்கு செல்ல முடியாமலும், மகனுக்கு மருத்துவ செலவும் செய்ய முடியாமலும் தவிக்கும் தம்பதிக்கு, மாநகராட்சி தரப்பில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ