உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

கொரட்டூர், காதல் திருமணம் செய்த இளம்பெண், ஆறு மாதத்தில் தற்கொலை செய்த விவகாரத்தில், ஆர்.டி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரட்டூர், கங்கை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்; கூலித்தொழிலாளி. ஆறு மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி, 18, என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீதாஞ்சலியின் பெற்றோர், கடும் எதிர்ப்பாக இருந்துள்ளனர்.இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த கீதாஞ்சலி, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரட்டூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஆறு மாதமே ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ