மேலும் செய்திகள்
கோப்பை வெல்வாரா தெலுங்கானா செஸ் வீரர்?
28-Aug-2024
சென்னை, ஆதமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் தொடரின் ஐந்தாம் கட்ட போட்டி போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது.இப்போட்டியில், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மானிக் மிகுலாஸ் மற்றும் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த ஓராஸ்லி, மங்கோலியாவைச் சேர்ந்த வீராங்கனை யூரிந்துயா உர்ட்சைக் உட்பட 10 பேர் மோதி வருகின்றனர்.நேற்று மதியம் ஏழாவது சுற்று நிறைவடைந்தது. இதில், ரஷ்யாவின் அலெக்சாண்டர் மற்றும் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மானிக் மிகுலாஸ் ஆகியோருக்கான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.அனைத்து போட்டிகள் முடிவில், தெலுங்கானாவின் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பலா மற்றும் ரஷ்யாவின் டேவிட் ஆகியோர் தலா ஐந்து புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து, ரஷ்யாவின் அலெக்சாண்டர் 4.5 புள்ளிகளிலும், ஸ்லோவாக்கியாவின் மானிக் மிகுலாஸ் 4 புள்ளிகளிலும் உள்ளனர்.தமிழகத்தின் அருண், ஹர்ஷத், மஹாராஷ்டிராவின் ஜெய்வீரர் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
28-Aug-2024