கோவில் பணி துவக்கி வைப்பு
பாடி, பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோவில் குளத்தை 1.80 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி மற்றும் 84 லட்சம் ரூபாயில் புதிய தேர் உருவாக்கும் பணியை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.அதேபோல், கைலாசநாதர் கோவிலில், 3.50 கோடி ரூபாயில், சாலை மட்டத்திற்கு கோவிலை உயர்த்தும் பணியையும் துவக்கி வைத்தார். இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் மூர்த்தி பலர் பங்கேற்றனர்.