உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைதிகளுக்கு பரிசோதனை

கைதிகளுக்கு பரிசோதனை

சென்னை: கிட்னி பாதிப்பு, உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகரித்து வருவதால், புழல் சிறை கைதிகளுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை புழல் பகுதியில், 212 ஏக்கரில் இரண்டு மத்திய சிறைகள் உள்ளன. இவற்றில், 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கும், புழல் சிறையில் அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தார். அப்போது, கிட்னி பாதிப்பு காரணமாக கைதிகள் இறப்பது தெரியவந்தது. இதையடுத்து, கைதிகளின் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. உயர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !