மேலும் செய்திகள்
'ஏ' டிவி ஷ ன் வாலிபால் ஐ.ஓ.பி., வங்கி வெற்றி
12-Sep-2024
சென்னை:சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 'டிவிஷன் - ஏ' வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.இதில், நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, டி.ஜி.வைஷ்ணவ், வருமான வரி, ஐ.சி.எப்., உள்ளிட்ட எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டிகள் 'ரவுண்ட் ராபின்' முறையில், தினமும் இரண்டு போட்டிகள் வீதம், இரவு நேர ஆட்டங்களாக நடக்கின்றன.நேற்ற முன்தினம் இரவு நடந்த 'லீக்' ஆட்டத்தில், ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஆர்.எம்., அகாடமி அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 25 - 20, 25 - 18, 2 - -25, 27 - 25 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி., அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., வீரர் ஷஸ்வத் சிறந்த வீரராக தேர்வாகி, 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வென்றார்.மற்றொரு போட்டியில், ஆட்டம் துவங்கியது முதல், டி.ஜி.வைஷ்ணவ் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். முதல் இரண்டு செட்களை கைப்பற்றினர். சுதாரித்த எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி அடுத்த இரண்டு செட்களையும் தனதாக்கினர். இதனால், ஆட்டம் ஐந்தாவது செட்டிற்கு சென்றது. அனல் பறந்த இந்த செட்டை எஸ்.ஆர்.எம்., கைப்பற்றி, முடிவில் 18 - 25, 19 - 25, 25 - 21, 25 - 21, 15 - 10 என்ற கணக்கில், டி.ஜி., வைஷ்ணவ் அணியை தோற்கடித்தது. போட்டியில், எஸ்.ஆர்.எம்., வீரர் தருண், சிறந்த வீரராக தேர்வாகி, 1 கிராம் தங்க நாணயம் வென்றார்.
12-Sep-2024