உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் தள்ளாடிய டாக்டர் அரசு மருத்துவமனையில் அவலம்

போதையில் தள்ளாடிய டாக்டர் அரசு மருத்துவமனையில் அவலம்

திருவள்ளூர், செப். 12-திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர், போதை தலைக்கேறிய நிலையில் நோயாளிகளுடன் ஒருமையில் பேசியதோடு, மருத்துவமனை வராண்டாவிலே படுத்து உறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் நல்லதம்பி, 40, என்பவர் பொது மருத்துவராக இரவு பணியில் இருந்தார். அப்போது மது போதையில் நோயாளி ஒருவருக்கு எடுத்த இ.சி.ஜி., ரிப்போர்ட்டை வைத்து, மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்தார்.இதை பார்த்த நோயாளி மற்றும் உதவியாளர்கள் கேட்ட போது, அவர்களை ஒருமையில் ஆபாசமாக பேசி, வெளியே போகச் சொல்லி திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த நோயாளிகள், 'மருத்துவரிடம் நீங்கள் எப்படி மதுபோதையில் இங்கு வரலாம்' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனே, மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரை அழைத்துச் சென்றதோடு, நோயாளி மற்றும் உதவியாளர்களை சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் போதை தலைக்கேறிய மருத்துவர் நல்லதம்பி, வார்டுக்கு வெளியே உள்ள வாராண்டாவில் படுத்து, குறட்டை விட்டு துாங்கி உள்ளார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு கெஞ்சினர். ஆனால், போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர், மருத்துவமனைக்குள் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, மருத்துவமனை பாதுகாவலர்கள் மருத்துவரை துாக்கி, தங்கள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். போதை தெளிந்த நிலையில், நேற்று அதிகாலை மருத்துவர் எழுந்து வீட்டிற்கு சென்றார்.தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.நடவடிக்கைகுடிபோதையில் பணி மேற்கொண்ட மருத்துவர் மீது விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.ரேவதி, மருத்துவக்கல்லுாரி டீன், திருவள்ளூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaran
செப் 12, 2024 18:14

இட ஒதுக்கீட்டுக்கு நன்றி..


JOHN CHANDRASEKAR
செப் 12, 2024 17:50

இட ஒதிக்கீட்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் , அவர் என்ன ஜாதி தெரியுமா உனக்கு ......சும்மா வாய்ல வந்ததை பேசாத


Sudha
செப் 12, 2024 14:06

எந்த கடை சரக்கு எத்தனை நாள் புழக்கம் கொஞ்சம் ரிப்போர்ட் கொடுங்க


chennai sivakumar
செப் 12, 2024 08:55

அந்த காலத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் போதையில் வந்ததால் பொதுத்துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஹும் அது அந்த காலம்


rasaa
செப் 12, 2024 08:54

எதுவும் நடக்காது. அடி முதல் நுனி வரை இதே நிலைதான். இட ஒதுக்கீடு என்ற பெயரில் தரமற்ற, தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தினால் இப்படித்தான் இருக்கும்.


karthik
செப் 12, 2024 08:48

இவனுங்க தான் கொல்கத்தா மருத்துவமனையில் நடந்ததை கேள்வி கேக்குறானுங்க.


Kalyanaraman
செப் 12, 2024 08:32

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொம்பு முளைத்துள்ளது. ஆதலால் அவர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் துறை ரீதியான நடவடிக்கை என்ற பெயரில் அப்படியே அமுக்கி விடுவார்கள். அதிகபட்சம் இட மாற்றம் அவ்வளவுதான்.


புதிய வீடியோ