உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காதலை முறித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

காதலை முறித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சாஸ்திரிநகர், மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜய், 24. இவர், அடையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை, ஓராண்டாக காதலித்துள்ளார். அஜய் மீது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இது தெரிந்த பெண், அஜயிடம் இருந்து விலகி உள்ளார்.சில தினங்களுக்குமுன், அடையாறு, கற்பகம் கார்டன் தெருவில் அந்த பெண்ணை மறித்து காதலிக்க வற்புறுத்தி, மிரட்டல் விடுத்துள்ளார்.அந்த பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வருவதை அறிந்து அஜய் தப்பி சென்றார். பெண்ணின் புகாரின் படி, அஜயை நேற்று சாஸ்திரிநகர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ