உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் மாடு முட்டி முதியவர் படுகாயம்

மீண்டும் மாடு முட்டி முதியவர் படுகாயம்

ஏழுகிணறு, சென்னை ஏழுகிணறு பகுதியில், மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்தார்.ஏழுகிணறு, சேவியர் தெருவைச் சேர்ந்தவர் முகமது பசீர், 65. கடந்த 15 ஆண்டுகளாக இரண்டு கண்கள் தெரியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, அவ்வழியே வந்த மாடு ஒன்று முதியவரை முட்டியது. இதில் முதியவருக்கு இடுப்பின் கீழ் பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பிடிபடும் மாடுகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டாலும், அவற்றை எல்லாம் பெரிய அளவில் மாட்டு உரிமையாளர்கள் கண்டுகொள்வதில்லை. பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.இதையடுத்து, மாடுகள் வளர்ப்பதை முறைப்படுத்தினால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு 'லைசென்ஸ்' கட்டாயம் என்ற புதிய விதி, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ