உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டல் செய்தவரை வெட்டியவர் கைது

கிண்டல் செய்தவரை வெட்டியவர் கைது

செங்குன்றம், செங்குன்றம், புது நகரைச் சேர்ந்த கேசவராஜ், 25. நேற்று முன்தினம் நள்ளிரவு, செங்குன்றம், தீர்த்தம் கரையம்பட்டையைச் சேர்ந்த நண்பர் சுனில் குமார், 27 என்பவருடன், வீட்டருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற, அதே பகுதியைச் சேர்ந்த கற்குவேல், 38 என்பவரை கிண்டல் செய்து உள்ளார். ஆத்திரமடைந்த கற்குவேல், சிறிது நேரம் கழித்து கத்தி எடுத்து வந்து, இருவரையும் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சுனில் குமார், கேசவராஜ் இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கற்குவேலை செங்குன்றம் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ