மேலும் செய்திகள்
திருவள்ளூரில் டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டி
26-Aug-2024
சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 14வது மாவட்ட அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, போரூர் அடுத்த கெருகம்பாக்கம் எஸ்.எஸ்.ஆர்., ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 20 கிளப்களில் இருந்து, 500 மாணவ - மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். போட்டியை, மாநில சங்க தலைவர் முருகானந்தம் துவக்கி வைத்தார். அனைத்து போட்டிகள் முடிவில், சி.ஆர்.எஸ்.ஏ., எனும், சேசர்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி அணி, 227 புள்ளிகள் பெற்று, முதல் இடத்தை தட்டிச் சென்றது.சரவணன் ஸ்கேட்டிங் கிளப், 186 புள்ளிகள் பெற்று இரண்டாமிடமும், ஏழுமலை ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி, 170 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தன.ஒவ்வொரு வயது பிரிவு வாரியாக, முதல் ஐந்து இடங்களை பிடித்த வீரர்கள், மாநில போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளனர்.இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சர்வதேச சைக்கிளிங் சாம்பியன் சவுந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்.
26-Aug-2024