உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாடகை வீட்டை லீசுக்கு விட்ட பெண் வீடியோ வெளியிட்டு நாடகம்

வாடகை வீட்டை லீசுக்கு விட்ட பெண் வீடியோ வெளியிட்டு நாடகம்

விருகம்பாக்கம்,:கோடம்பாக்கத்தை சேர்ந்த லோகநாயகி என்பவர், கணவரை பிரிந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆழ்வார் திருநகர் இந்திரா நகரில் உள்ள பழனி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார். திடீரென, சமூக வலைதள பக்கத்தில் லோகநாயகி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், வழக்கறிஞர்கள் சிலரோடு வீட்டு உரிமையாளர் வந்து வீட்டில் இருந்த பொருட்களை துாக்கி வெளியே வீசியதாகவும், தனது 16 வயது மகளை தாக்கியதாகவும் குறிப்பிட்டு அழுதார். தனது குழந்தையை காப்பாற்றுமாறும் கதறினார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கூறியதாவது: வாடகைக்கு குடியேறிய லோகநாயகியுடன், பழனி பரிவுடன் பழகியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட லோகநாயகி, வாடகைக்கு இருந்த வீட்டை மற்றொரு நபருக்கு ஆறு லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு விட்டுள்ளார். இதனை அறிந்த பழனி வீட்டை உடனே காலி செய்ய கூறியுள்ளார். ஆத்திரமடைந்த லோகநாயகி, தான் வளர்த்த நாயை விட்டு, பழனியை கடிக்கச் செய்துள்ளார். இதில் காயமடைந்த பழனி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை மறைப்பதற்கு தான் லோகநாயகி வீடியோ வெளியிட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினார்.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !