உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நண்பரை தீர்த்துக்கட்ட முயன்ற மூவர் சிக்கினர்

நண்பரை தீர்த்துக்கட்ட முயன்ற மூவர் சிக்கினர்

வியாசர்பாடி, வியாசர்பாடி, திடீர் நகர் காந்திபுரத்தை சேர்ந்தவர் கோபி, 29; பெயின்டர். கோபி, தன் நண்பர்களான விநாயகம், 23, விஜயன், 25, முரளி, 22, ஜங்கிலி ஆகாஷ் ஆகியோருடன் சேர்த்து, மது குடிப்பது வழக்கம்.கோபிக்கும், விநாயகத்திற்கு இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டு, பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோபியை மது அருந்துவதற்காக திடீர் நகர், ரயில்வே டிராக் அருகே அழைத்து சென்றனர்.அப்போது தகராறு ஏற்பட்டு, கோபி வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழிந்து வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த கோபியை, விஜயன், முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி, கல் மற்றும் கத்தியால் தாக்கி தப்பினர்.பலத்த காயமடைந்த கோபியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, விஜயன், முரளி, விநாயகம் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். ஜங்கிலி ஆகாைஷ தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ